search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து மகா சபை"

    • அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
    • சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.

    அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.

    இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.

    மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி இந்து மகா சபை ரத்தத்தில் கையொப்பமிட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.#HinduMahasabha #PMModi
    புதுடெல்லி :

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (எஸ்.சி., எஸ்.டி. சட்டம்)  உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் சில மாற்றங்களை செய்தது. குறிப்பாக இந்த சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டோரை, உடனடியாக கைது செய்யும் விதிமுறையை தடை செய்தது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில், எஸ்.சி, எஸ்.டி, அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி இந்து மகா சபை ரத்தத்தில் கையொப்பமிட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக இந்து மகா சபை பொதுச்செயலாளர் பூஜா சகுன் பாண்டே கூறுகையில், ’வாக்கு வங்கி அரசியலுக்காகவே  பிரதமர் மோடி தலைமையிலான அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டில் உள்ள ஜாதிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து சமூகத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    எனவே, வன்கொடுமை தடுப்புச் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்துகொள்ள பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    பிரதமருக்கு இந்து மகா சபை அனுப்பிய கடிதத்தில் பூஜா சகுன் பாண்டே உள்பட 14 பேர் ரத்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    #HinduMahasabha #PMModi
    ×